Monday, June 22, 2009

மக்கள் பிரச்சினைக்காக போராடுவேன்-விஜய்!














இன்று முதல் எனது ரசிகர் மன்றங்கள் மக்கள் இயக்கமாக மாறுகிறது. இனி மக்கள் பிரச்சினைகளுக்காக நானும் எனது இயக்கத்தினரும் குரல் கொடுப்போம். மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவேன்!, என்று நடிகர் விஜய் தனது பிறந்தநாளன்று அறிவித்துள்ளார்.

இன்று 35வது பிறந்த நாள் காணும் விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஆண்டுதோறும் என் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். பலர் தங்களின் வருமானத்துக்கு மீறி என் மீதுள்ள அபிமானத்தில் மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்து வருகின்றனர்.

இனி உலகம் கம்ப்யூட்டர்மயமாகப் போகிறது. இன்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது.

கல்வி, பொழுதுபோக்கு எல்லாமே இன்டர்நெட் வழியாகத்தான் என்பது உறுதியாகிவிட்டது. மக்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி பெரிதும் அவசியம்.

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து வந்தேன். இதை ரசிகர்களிடம் கூறியதுமே அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டனர்.

இந்த ஆண்டு எனக்கு மிகவும் விசேஷமான பிறந்தநாள். ரசிகர்கள் என் பொருட்டு கஷ்டப்பட்டு,இஷ்டப்பட்டு இந்த பணிகளை செய்து வருகின்றனர். அரசியல் அமைப்பாக மாறினால் இதே நலத் திட்டங்களை பெரிய அளவில் மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசியல் அமைப்பாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது உண்மைதான். நானே நேரடியாக ரசிகர்களைச் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். ரசிகர்களை மட்டுமல்ல, பொது மக்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். அதன் பிறகு தற்போது என்னுடைய பணியான நடிப்பதை செய்து வருகிறேன்.

இனி என் ரசிகர்கள்... தொண்டர்கள்!

அரசியல் கட்சி துவக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்போது அது பற்றி நான் நினைக்கவில்லை. ஆனால் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால் எப்போது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய ரசிகர்கள் இப்போதே என்னுடைய தொண்டர்களாக மாறி விட்டனர்.

என்னுடைய இயக்கம் சார்பாக உள்ளூர் பிரச்சனைகளுக்காக நிச்சயமாக போராடுவார்கள் எனது இயக்கத்தினர். நானும் அதில் நிச்சயம் பங்கேற்பேன். வீதியில் இறங்கிப் போராடுவேன்.

மிரட்டல் வந்ததா?

அரசியல் கட்சி துவங்குவது பற்றி மிரட்டல் வந்ததா? என்று ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த விஜய், 'மிரட்டற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆளில்லை...' என்றார்.

வேட்டைக்காரன் படம் குறித்து பேசிய விஜய், இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு பெரிய செய்தி இருப்பதாகவும், தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்றும் கூறினார்.

தனது 50 வது படத்தை சங்கிலி முருகன் தயாரிப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.

Vijay Birthday Interview














எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருட பிறந்த நாள் கொஞ்சம் விசேஷம்தான் விஜய்க்கு! அரசியல் துறுதுறுப்புகள் ஒருபக்கம். அதிரடி 50 வது படம் மறுபக்கம் என இந்த பிறந்த நாளில் கேள்வி கேட்க ஏராளமான விஷயங்களோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளைய தளபதி.



பல வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடியிருக்கேன். ஆனால் இந்த வருஷம் ஸ்பெஷல். எப்படின்னா, கல்விக்காக இலவசமா கம்ப்யூட்டர் கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன். அது நடந்திருக்கு. எங்களோட கல்யாண மண்டபத்தை இப்போ பார்த்தால், ஏதோ மினி ஆஸ்பிடல் மாதிரி இருக்கு. செட்டிநாடு எல் சென்ட்டர் இலவச மருத்துவ முகாமை எங்க ரசிகர் மன்றத்தோட சேர்ந்து இங்கே நடத்துறாங்க. என்னோட ரசிகர்கள் கஷ்டப்பட்டு இதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க என்றவர் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க துவங்கினார்.

வேட்டைக்காரன் பற்றி சொல்லுங்க?

படம் 75 சதவீதம் முடிஞ்சிருக்கு. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும். என்னோட 50 வது படத்தை பற்றி கேட்கிறாங்க. இந்த படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். யார் இயக்குனர்? யார் ஹீரோயின் என்பதெல்லாம் வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகு முறைப்படி அறிவிப்பேன். அதுவரைக்கும் பொறுத்துக்கோங்க.

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதா ஒரு பேச்சிருக்கே?

ரசிகர்கள் தங்களோட சக்திக்கு மீறி பல நல்ல விஷயங்கள் செஞ்சிட்டு வர்றாங்க. அவங்களோட விருப்பம் நான் அரசியலுக்கு வரணும்னு இருக்கு. இது குறித்து நான் ஆலோசனை செஞ்சது உண்மைதான். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ரசிகர்களோட மட்டுமில்லே, மக்களோடவும் கலந்து பேசியிருக்கேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே ரசிகர்களோட கருத்துக்கும் எனக்கும் முரண்பாடு இருக்கு. இருந்தாலும், இப்போதைக்கு இதை மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கலாம் என்று முடிவு செஞ்சிருக்கோம்.

உங்கள் ரசிகர்களை இனி தொண்டர்கள் என்று அழைக்கலாமா?

அவங்க எப்பவோ தொண்டர்களா மாறிட்டாங்க.

அரசியலுக்கு வரப்போறதா முடிவு பண்ணிட்டீங்க. பொது பிரச்சனைகளுக்காக போராடுவீர்களா?

கண்டிப்பாக தொண்டர்களோட சேர்ந்து நானும் போராட்டத்திலே முன்னாடி நிப்பேன்!

கட்சி ஆரம்பிக்கிறது சம்பந்தமா மிரட்டல், பாராட்டுகள் வந்ததா?

மற்றவங்க மிரட்டுற அளவுக்கு நான் ஒண்ணும் சீன் போடலியே?

இவ்வாறு பதிலளித்த விஜய், வடபழனி கோவிலில் 500 ஏழைகளுக்கு அன்னதானம் போட அவசரம் அவசரமாக புறப்பட்டார்.

நடிகர் விஜய் கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தொடங்குகிறார் -தினத்தந்தி

பிறந்த நாளையொட்டி, சென்னையில்
நடிகர் விஜய் கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தொடங்குகிறார்


சென்னை, ஜுன்.21-

நடிகர் விஜய் தனது பிறந்தநாளையொட்டி, சென்னையில், 2 இடங்களில் கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தொடங்குகிறார்.

அறிக்கை

இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான ரசிகர்களே, ரசிகைகளே, அன்புத் தாய்மார்களே, நண்பர்களே, 1992-ம் ஆண்டு என்னுடைய முதல் படம் `நாளைய தீர்ப்பு' வெளியானபோது எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தீர்கள். அந்த ரசிகர் மன்றங்கள் படிப்படியாக முன்னேறி சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்ந்து சமூக உணர்வோடும், சமுதாயச் சிந்தனையோடும் ஆக்கப்பூர்வமான நற்பணிகளை செய்து எனக்குப் பின்னே ஒரு மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்திருக்கிறீர்கள்.

பெரிய பெரிய நற்பணிகளை சேவை மனப்பான்மையோடு செய்து நல்ல சமூக நலத் தொண்டர்களாக உயர்ந்து இருக்கிறீர்கள். இது எனக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும் பெருமையான விஷயம்.

பிறந்தநாள்

ஒரு நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி. கல்விக் கூடங்களில்தான் நாட்டின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால்தான் கல்வி பணியில் நான் அதிக அக்கரை எடுத்து கொள்கிறேன். பல நூறு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கி வருவதும் நீங்கள் அறிவீர்கள்.

இதன் அடுத்தக்கட்டமாக இந்த வருடம் என் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 22-ந் தேதி சென்னையில் 2 இடங்களில் இலவச கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தொடங்குகிறேன். இது கம்ப்ïட்டர் யுகம், மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கம்ப்ïட்டர் படிப்புதான். ஆகவே, தான் இதை நான் ஆரம்பிக்கிறேன்.

கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி

நான் எந்த நல்ல செயல்களைச் செய்தாலும் என்னை பின்பற்றி நீங்களும், உங்கள் பகுதிகளில் அதை செய்து அசத்தி வருகிறீர்கள். சென்னையில் ஆரம்பிக்கின்ற இந்த இலவச கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட, நகரங்களிலும், கிராமங்களிலும் உருவாக வேண்டும். அதனால் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் பயன்பெற வேண்டும். இரண்டு இருபது ஆகி, இருபது இரண்டாயிரமாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதைதான் என் பிறந்தநாள் பரிசாக உங்களிடம் நான் கேட்கிறேன்.

"நேற்றைய தொண்டன், இன்றைய தலைவனாக இருக்கின்றான், அதேபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு.

இதை ஆழமாக மனதில் வைத்து மேலும் உங்கள் சமூக பணியை வளர்த்துக் கொண்டு இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்காக பாடுபடும், ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, ஒரு வலிமைமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையில் நான் அடுத்த ஆண்டில் கால்பதிக்கிறேன்''.

இவ்வாறு நடிகர் விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

விஜய்க்கு எங்கள் இனிய பிறத்த நாள் வாழ்த்துக்கள்




விஜய்க்கு எங்களின் இனிய பிறந்த நாள் வாழ்துக்கள், எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

Friday, June 19, 2009

நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி - தினத்தந்தி

இன்னும் முடிவு எடுக்கவில்லை
"அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடந்தது உண்மைதான்''
நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி

சென்னை, ஜுன்.19-

"நான், அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடத்தியது உண்மைதான். ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை'' என்று நடிகர் விஜய் கூறினார்.

பேட்டி

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும், கட்சி தொடங்கப்போவதாகவும் சமீபகாலமாக தகவல்கள் பரவியது. இதுபற்றி விஜய்யிடம், `தினத்தந்தி' நிருபர் கேட்டார். அதற்கு பதில் அளித்து விஜய் கூறியதாவது:-

``என் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம், ரசிகர்கள்தான். அவர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அதன் அடையாளமாக தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரம் நற்பணி மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்கள் சார்பில் ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தகுதிக்கு மீறி, பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

அரசியல்

நற்பணி மன்றங்களை, அரசியல் அமைப்பாக மாற்றினால் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அதிக அளவில் உதவிகளை செய்யலாம் என்பது என் ரசிகர்களின் விருப்பம். இதை என்னிடம் பலமுறை சொல்லி வந்தார்கள். என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை மகனாகவும், அண்ணன்-தம்பியாகவும் நினைக்கும் தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும் நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்பட்டேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

கருத்து

இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

விஜயகாந்த்

இதுதொடர்பாக எங்க அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த ஒரு பேட்டியில், ``விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி விஜயகாந்த் பயப்படுகிறார்'' என்று கூறியதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பொதுவாகவே நாங்கள் யாரை பற்றியும் குறை சொல்லி பேசுவது இல்லை. என்றாலும் அப்பாவிடம் இதுபற்றி கேட்டேன். ``நான் அப்படி சொல்லவே இல்லை'' என்றார்.

அண்ணன் விஜயகாந்த், என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர். அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.''

இவ்வாறு விஜய் கூறினார்.

Wednesday, June 17, 2009

விஜயின் முத்தான பத்து விஷயங்கள்

விஐய் 50-வது படத்திற்கும் எம்.ஜீ.ஆர் படத்தலைப்பு 'உரிமைக்குரல்'

விஐய் 50-வது படத்திற்கும் எம்.ஜீ.ஆர் படத்தலைப்பு



விஜய் தற்போது நடித்து வரும் 'வேட்டைக்காரன்' படம் அவருக்கு 49-வது படம். அடுத்து, ஐம்பதாவது படத்துக்கும் 'எங்க வீட்டுப் பிள்ளை' என எம்.ஜி.ஆர் பட டைட்டில் வைத்திருப்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அந்தப் பெயர் சூட்டலில் இப்போது சிக்கல்... நாகிரெட்டியாரின் வாரிசு வெங்கட்ரமண ரெட்டி, நடிகர் பரத்தை ஹீரோவாக வைத்துத் தயாரிக்கும் படத்துக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' என பெயர் வைத்து, ஒரு வாரம் படப்பிடிப்பும் நடத்தி விட்டாராம். அதனால், 'எங்க வீட்டுப் பிள்ளை'யை விஜய்க்குத் தர மறுத்து விட்டார்களாம். அதனால் இப்போது விஜய் படத்துக்கு 'உரிமைக்குரல்' என்று இன்னொரு எம்.ஜி.ஆர். படப் பெயரை சூட்டி விட்டார்கள். இதிலும் வில்லங்கமாகி விடக்கூடது என்பதற்காக, நீலாங்கரையில் இருக்கும் அமரர் ஸ்ரீதர் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்


Source :Junior Vikatan

புது ஸ்டைலில் விஜயின் வேட்டைக்காரன் - குங்குமம்




Popular Posts