Monday, June 22, 2009

நடிகர் விஜய் கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தொடங்குகிறார் -தினத்தந்தி

பிறந்த நாளையொட்டி, சென்னையில்
நடிகர் விஜய் கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தொடங்குகிறார்


சென்னை, ஜுன்.21-

நடிகர் விஜய் தனது பிறந்தநாளையொட்டி, சென்னையில், 2 இடங்களில் கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தொடங்குகிறார்.

அறிக்கை

இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான ரசிகர்களே, ரசிகைகளே, அன்புத் தாய்மார்களே, நண்பர்களே, 1992-ம் ஆண்டு என்னுடைய முதல் படம் `நாளைய தீர்ப்பு' வெளியானபோது எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தீர்கள். அந்த ரசிகர் மன்றங்கள் படிப்படியாக முன்னேறி சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்ந்து சமூக உணர்வோடும், சமுதாயச் சிந்தனையோடும் ஆக்கப்பூர்வமான நற்பணிகளை செய்து எனக்குப் பின்னே ஒரு மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்திருக்கிறீர்கள்.

பெரிய பெரிய நற்பணிகளை சேவை மனப்பான்மையோடு செய்து நல்ல சமூக நலத் தொண்டர்களாக உயர்ந்து இருக்கிறீர்கள். இது எனக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும் பெருமையான விஷயம்.

பிறந்தநாள்

ஒரு நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி. கல்விக் கூடங்களில்தான் நாட்டின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால்தான் கல்வி பணியில் நான் அதிக அக்கரை எடுத்து கொள்கிறேன். பல நூறு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கி வருவதும் நீங்கள் அறிவீர்கள்.

இதன் அடுத்தக்கட்டமாக இந்த வருடம் என் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 22-ந் தேதி சென்னையில் 2 இடங்களில் இலவச கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தொடங்குகிறேன். இது கம்ப்ïட்டர் யுகம், மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கம்ப்ïட்டர் படிப்புதான். ஆகவே, தான் இதை நான் ஆரம்பிக்கிறேன்.

கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி

நான் எந்த நல்ல செயல்களைச் செய்தாலும் என்னை பின்பற்றி நீங்களும், உங்கள் பகுதிகளில் அதை செய்து அசத்தி வருகிறீர்கள். சென்னையில் ஆரம்பிக்கின்ற இந்த இலவச கம்ப்ïட்டர் பயிற்சி பள்ளி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட, நகரங்களிலும், கிராமங்களிலும் உருவாக வேண்டும். அதனால் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் பயன்பெற வேண்டும். இரண்டு இருபது ஆகி, இருபது இரண்டாயிரமாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதைதான் என் பிறந்தநாள் பரிசாக உங்களிடம் நான் கேட்கிறேன்.

"நேற்றைய தொண்டன், இன்றைய தலைவனாக இருக்கின்றான், அதேபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு.

இதை ஆழமாக மனதில் வைத்து மேலும் உங்கள் சமூக பணியை வளர்த்துக் கொண்டு இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்காக பாடுபடும், ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, ஒரு வலிமைமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையில் நான் அடுத்த ஆண்டில் கால்பதிக்கிறேன்''.

இவ்வாறு நடிகர் விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts