Thursday, June 23, 2011

நடிகர் விஜய் உற்சாக பிறந்த நாள் கொண்டாட்டம்



நடிகர் விஜய் இன்று தனது 37வது பிறந்த நாளை பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஏழை மக்களுக்கு உதவிகள், மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, பாடப்புத்தகங்கள் என வழங்கி தனது வருமானத்தில் சிறு பகுதியை சமூக சேவைக்காக பயன்படுத்தி வரும் விஜய், இன்று தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார். அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் வந்து விட்டதாலோ என்னவோ... இந்த ஆண்டு சற்றே பக்குவமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும், என்று தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் இன்று (22ம்தேதி) காலை சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மனைவி சங்கீதாவுடன் நேரில் சென்று தங்க மோதிரம் அணிவித்தார். பரிசு பொருட்களும் வழங்கினார். இந்த ஆஸ்பத்திரியில்தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். டாக்டர்கள், நர்சுகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் விஜய்யை வரவேற்றனர். அவரை காண ஆஸ்பத்திரி முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் மோதிரம் அணிவித்தார். தமிழகம் முழுவதும் 500 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.

பின்னர் சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். ஏராளமானோர் நீண்ட கியூவில் நின்று விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர்கள் ஜீவா, தாமு, டைரக்டர்கள் ஷங்கர், ஏ.வெங்கடேஷ், பேரரசு, ராஜா, தயாரிப்பாளர்கள் ஆஸ்கார் ரவிச்சந்திரன், கலைப்புலி தாணு, ஆர்.பி. சவுத்ரி, மோகன், நடராஜன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் விஜய்யை வாழ்த்தினார்கள்.

தொடர்ந்து ஏழைகளுக்கு வேஷ்டி - சேலைகளை விஜய் வழங்கினார். மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார். ரசிகர்கள் 500 பேர் ரத்த தானம் செய்தனர். சாலிகிராமம் பாலலோக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை விஜய் தொடங்கி வைத்தார். டாக்டர் மோகன் தலைமையில் இந்த முகாம் நடந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் கண்தானம் செய்தனர். சின்மயா நகரில் உள்ள குழந்தை ஏசு கோவிலில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு விஜய் இலவச மதிய உணவு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்திருந்தா

No comments:

Post a Comment

Popular Posts