Monday, June 13, 2011

ஷாங்காய் திரைப்பட விழாவில் நடிகர் விஜய்





சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த நடிகர் விஜய்க்கு சென்ற இடத்தில் சிறப்பான வரவேற்பு. ஆங்கில-சீன மொழி சப் டைட்டிலுடன் காவலன் திரைப்படத்தை அங்கு திரையிட்டார்களாம். ஒவ்வொரு காட்சியையும் விழுந்து விழுந்து சிரித்தபடி ரசித்தவர்கள் கடைசி இருபது நிமிட காட்சியை பார்த்து கண்கலங்கினார்களாம்.

படம் முடிந்ததும் ரசிகர்கள் மத்தியில் விஜய் பேசினார். அப்போது கூறியதாவது-

வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம். நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரை சொல்லி அவர்கள் என்னை பாராட்டியது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் இது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

இவ்வாறு மனம் திறந்து பேசிய விஜய், வரும் 15 ந் தேதி இந்தியா திரும்புகிறார்.



another news



" உங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்" : சீனாவில் விஜய்




ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் நேற்று (11.06.2011- ஞாயிறு) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது. " சீனர்கள் பலர் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ஆழமாக ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது  எனக்கு ஆச்சரியத்தை தந்தது " என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கி உள்ளார்கள். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியுள்ளார்கள். படம் பார்த்து முடிந்ததும், அவர்கள் மத்தியில் விஜய் பேசியபோது :

" வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்துக் கொள்வது இதுதான் முதல்முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம். நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி  பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன், இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். " என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார். 'காவலன்' திரைப்படம் ஷாங்காய் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உறுதுணையாக இருந்த திருமதி. ரேக்ஸ் அவர்களுக்கும் தமது உரையில் நன்றி தெரிவித்தார் விஜய்.





No comments:

Post a Comment

Popular Posts