Sunday, January 23, 2011

ராஜா சின்ன ரோஜா மாதிரி-விஜய்யின் லட்சிய பேட்டி!


தனது படங்கள் வெளியாகிற நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பது விஜய்யின் வழக்கம்தான். என்றாலும், அவசரம் அவசரமாக நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்திக்க முன் வந்தார் விஜய். துறைமுகத்திற்குள் நடந்த வேலாயுதம் படப்பிடிப்புக்கே அழைக்கப்பட்டார்கள் நிருபர்கள். எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அழைக்கப்பட்டதால், துறைமுக வாசலிலேயே சுமார் முக்கால் மணி நேரம் நிற்க வைக்கப்பட்டார்கள். காரணம் செக்யூரிடி சம்பிரதாயங்கள். எப்படியோ கெஞ்சி கூத்தாடிதான் அவர்களை உள்ளே அழைத்துப் போனது விஜய் தரப்பு.

"அண்ணே... அரசியல் கேள்விகள் வேணாம்ணே" என்று அன்பாக கேட்டுக் கொண்டார் விஜய். அப்பவும் விடாமல் கேட்டு மடக்கிய நிருபர்களிடம், "இந்த சந்திப்பு காவலன் ரிலீஸ் நேரத்தில் பொறுமையா இருந்த என் ரசிகர்களுக்கு உங்க மூலமா நன்றி சொல்றதுக்குதான். அரசியல் விஷயங்களை இப்போ பேச வேண்டாம்" என்றார் திரும்ப திரும்ப. "வேலாயுதம் படம் பற்றிதான் இப்போ என்னோட முழு சிந்தனையும் இருக்கு. அடுத்து பகலவன் படத்தில் நடிக்கிறேன். முழு கதையையும் கேட்டுட்டேன். திருப்தியா இருக்கு".

"'ராஜா சின்ன ரோஜா' மாதிரி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஒரு படம் பண்ணணும். கிராமத்தில் விவசாயிகள் குறைஞ்சுட்டாங்க. விவசாயத்தின் முக்கியத்துவமும் குறைஞ்சுகிட்டே வருது. இந்த மனப்போக்கு மாறணும். இதையும் வெளிப்படுத்துற மாதிரி ஒரு படத்தில் நடிக்கப் போறேன்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்!

http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/jan/210111a.asp

No comments:

Post a Comment

Popular Posts