சென்னையில் இன்று ரோட்டரி கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண் தான விழிப்புணர்வுப் பேரணியை நடிகர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மெரீனா கடற்கரையில் நடந்த இந்த பேரணியில், கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சென்னை மேயர் மா.சுப்ரமணியமும் கலந்து கொண்டார்.
விஜய் வருகையை அறிந்ததும் அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். இதனால் விஜய் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. கடும் சிரமத்திற்கு மத்தியில் வந்து சேர்ந்த விஜய், கொடியசைத்துத் தொடங்கி வைத்த பின்னர் வேனில் ஏறி நின்று சிறிது நேரம் மட்டுமே பேசி விட்டு கிளம்பிப் போய் விட்டார்












No comments:
Post a Comment