











ஒரு கதையை ஒரே நிமிடத்தில் அழகாக சொல்லும் விளம்பரப் படங்கள் பிரமிக்க வைக்கின்றன. அந்தப் படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார் நடிகர் விஜய்.
கோகோ கோலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் நடிகர் விஜய்யை சந்திக்க வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வெற்றி யாளர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார். அத்துடன் இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 30 பேரின் குடும்பத்தினருடன் விஜய் ஜாலியாக கலந்துரையாடினார்.
தொடர்ந்து நடிகர் விஜய் பேசுகையில், "கோகோகோலா நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அதிகமாக ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவென்றால், ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரம் ஓடும். அதில் ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்வார்கள்.
ஆனால் ஒரு பொருளின் புரமோஷனுக்கான விளம்பரம் என்பது ஒரு நிமிடம் மற்றும் 30 வினாடி மட்டுமே ஓடக் கூடியது. இதிலும் ஒரு கதை சொல்வார்கள்.
இவ்வாறு ஒரு நிமிடத்தில் சொல்லப்படும் கதைதான் எனக்கு பிரமிப்பை அளிக்கிறது. அப்போதே என் மனதில் இது போன்ற விளம்பர படங்களில் குறிப்பாக கோக் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். என்னுடைய ஆசை நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment