Thursday, May 28, 2015

புலி வருது !

'புலி வருது... புலி வருது!’ என ஜாலி கிலி பிடித்துக்கிடக்கிறார்கள் இளைய தளபதி குரூப்ஸ்! 
விஜய் படத்துக்கு, 'வி ஆர் வெயிட்டிங்’ என இப்போதே செம எதிர்பார்ப்பு. அதை உணர்ந்தே ஃபிரேமுக்கு ஃபிரேம் பார்த்துப் பார்த்து மாஸ் ஆக்ஷன் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் 'புலி’ படக் குழுவினர். 'எந்த லெவலுக்கும் இறங்கி அடிப்போம். ஆனா, அதைப் பற்றி பப்ளிசிட்டி பண்ணிக்க வேண்டாம். தியேட்டர்ல பார்க்கிறப்ப 'ஷாக் சர்ப்ரைஸா’ இருக்கட்டும்!’ எனக் கனிவும் கண்டிப்புமாகச் சொல்லியிருக்கிறாராம் விஜய்.  
 'விஜய் படத்தில் டான்ஸ், காமெடிதானே முக்கியம்!’ என நினைத்திருக்கிறார்கள் படத்தின் ஹீரோயின்கள் ஸ்ருதியும் ஹன்சிகாவும். ஆனால், ஃபேன்டசி படமான அதில், ஹீரோயின்களுக்கு காஸ்ட்யூம் முதல் நடிப்பு வரை செமத்தியான வேலை.
 முன்பு போல '100 நாள்’ வசூல் டார்கெட் எல்லாம் இப்போது கோடம்பாக்கத்தில் கிடையாது.  முதல் வாரம்தான் கலெக்ஷன் இலக்கு. அதனால் 'செப்டம்பர் - 17’ விநாயகர் சதுர்த்தி சமயம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை சமயம் 'புலி’க்கு ரிலீஸ் தேதி குறித்திருக்கிறார்கள்.
 பிரபு, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, விஜயகுமார், சுதீப், தம்பி ராமையா, கருணாஸ்... இன்னும் நீள்கிறது 'புலி’ பட நட்சத்திரப் பட்டியல்.  
 'புலி’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள், விஜய் படங்களில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே புதிதாக இருக்குமாம். ஹாலிவுட்  ஆக்ஷன் படமான 'டை ஹார்டு’ பட  ஸ்டன்ட் மாஸ்டர்களில் ஒருவரான  சாங்லினை 'புலி’க்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள். 1,000 பேர் பங்குபெறும் சண்டைக் காட்சி, படத்தின் அட்டகாச ஆக்ரோஷமாக இருக்குமாம்.
 'தலைவா’, 'ஜில்லா’, 'புலி’ என மூன்று படங்களுக்கும் இடையில் 'லாங் லீவ்’ எடுக்கவே இல்லை விஜய். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இடைவெளி இல்லாமல் நடித்ததால், அடுத்து அட்லி படத்தில் நடிக்கும் முன் 'லீவ்’ எடுக்கவிருக்கிறார். ஜூன் மாதம்தான் விஜய் குழந்தைகளுக்கு 'சம்மர் வெகேஷன்’. குழந்தைகளை அழைத்துக்கொண்டு லண்டன் செல்லத் திட்டமிட்டிருக்கிறார் விஜய்.
  விஜய்யின் குழந்தைகள் சஞ்சய், ஷாஷா சுட்டிகளாக இருந்தபோது படப்பிடிப்புக்கு  அழைத்து வரும் விஜய், இப்போதெல்லாம் அவர்களை அழைத்து வருவது இல்லை. 'பசங்க வளர்ந்துட்டாங்க... ஷூட்டிங் போர் அடிக்கும்ல!’ என்கிறார் அந்த அன்புள்ள அப்பா.
  'ஐ’ படத்தின் சீன லொகேஷன்களை லைக் செய்திருக்கிறார் விஜய். அதனால் அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சீனாவிலும் நடக்குமாம்.
 பொதுவாக 120 நாட்கள் வரைதான் ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுப்பார் விஜய். ஆனால், 'புலி’க்கு மொத்தமாக 150 நாட்கள் கொடுத்திருக்கிறார். காரணம், விஜய் கேரியரின் மிக பிரமாண்ட சினிமாவாக உருவாகிக் கொண்டிருக்கிறது 'புலி’. அடுத்து அட்லி இயக்கும் படத்துக்கென தயாரிப்பாளர் தாணு, விஜய்க்கு கொடுக்கும் சம்பளம்... இதுவரை விஜய் வாங்காதது!

Monday, May 18, 2015

‪#‎Puli‬ - ‪#‎Ilayathalapathy‬ ‪#‎Vijay‬ and ‪#‎Hansika‬


40 நாட்கள் கிராம மக்களுடன் வாழ்ந்த விஜய்

விஜயின் தங்கமான மனசு
நெகிழ்ச்சியுடன்
கூறும் கிராமவாசி
விஜய் நடிக்கும் புலி படத்தின்
படப்பிடிப்பு
தலக்கோனம் காட்டுக்குள்
நடைபெற்றது.
படப்பிடிப்புக்காக நடுக்காட்டுக்குள்
ஒரு
கிராமம் போன்ற அரங்கு
அமைக்கப்பட்டது.
அங்கு 45 நாட்கள் படப்பிடிப்பு
நடைபெற்றது.
முதல் கட்ட படப்பிடிப்பு
தொடங்கியபோது,
விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும்
திருப்பதியில்.தங்கியிருந்து தினமும்
3
மணி நேரம் கார் பயணம் செய்து
படப்பிடிப்பில்
கலந்து கொண்டார்கள். இதை தொடர்ந்து
படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு
பக்கத்தில்
இருந்த ஒரு குக்கிராமத்தில், விஜய் தங்க
ஆரம்பித்தார். 40 நாட்கள் அங்கு
தங்கியிருந்து
படப்பிடிப்புக்கு சென்றார். 25 வீடுகளே
இருந்த அந்த கிராமத்தில் உள்ள
நடுத்தரமான
விட்டில் விஜய் தங்கியிருந்தார். பல
கோடிகள்
சம்பளம் வாங்கும் ஒரு நட்சத்திர நாயகன்
தங்களுடன் தங்கியிருப்பதை
கிராமத்தினர்
பெருமையாக கூறினார்கள்.
தினமும் படப்பிடிப்பு முடிந்ததும்
விஜய்
ஜாலியாக அந்த கிராமத்து மக்களுடன்
அமர்ந்து
சிரித்துபேசி விளையாடினார்.
நாற்பது நாட்களும் எங்களுக்கு
தீபாவளி
போல இருந்தாலும் அவர்
செல்லும்போது
கஷ்டமாக இருந்தது என்று
உணர்ச்சிவசப்பட்டு
கூறினார் கிரமவாசி ஒருவர்.
செல்லும்போது பரிசு பொருட்கள்
அனைவருக்கும் கொடுத்துள்ளார்
விஜய்

Thursday, February 26, 2015

Thursday, January 29, 2015

Kaththi 100th Day Poster Chennai


Albert theatre...100 days celebration


கத்தி'யின் 100வது நாள். முருகதாஸ் நன்றி





விஜய்,சமந்தா நடிப்பில் கடந்த வருட தீபாவளி தினத்தில் வெளியான 'கத்தி' திரைப்படம் இன்று 100வது நூறாவது வெற்றி நாளை கொண்டாடி வருகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கத்தி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிடும்போது, ''கத்தி படத்தை வெற்றிப்படமாக்க உதவிய ரசிகர்களுக்கும், மற்றும் விஜய், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் என்னுடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

'கத்தி' படத்திற்கு பின்னர் லிங்கா, ஐ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸான போதிலும் இன்னும் ஒருசில தியேட்டர்களில் 'கத்தி' வெற்றிகரமாக ஓடி 100வது நாளை எட்டியிருப்பது குறித்து கத்தி படக்குழுவினர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Popular Posts