Saturday, June 21, 2014

Here It Is The Official First Look Poster Of #IlayathalapathyVijay's #Kaththi



Wednesday, May 28, 2014

மேஜர் முகுந்த் வீட்டில் விஜய்!!

வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் குழந்தையை குஷிபடுத்திய விஜய் :
கடந்த ஏப்ரல் 25-ந் தேதி காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார்.
அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு இந்து என்ற மனைவியும், அர்ஷயா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்கூற நடிகர் விஜய் பலமுறை முயற்சி செய்தார். ஆனால், இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் பிற காரணங்களால் அவரால் முடியாமல் போனது.
இந்நிலையில், மேஜர் முகுந்தின் குழந்தை தன்னுடைய தீவிர ரசிகை என்று விஜய்க்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, விஜய் நேரில் சென்று முகுந்தின் குடும்பத்தாரையும், அவரது குழந்தை அர்ஷாவையும் சந்தித்தார்.
பின்னர் சிறிது நேரம் அக்குழந்தையிடம் சிரித்து பேசி அவளை குஷிபடுத்தினார். மேலும் அவளுடன் இணைந்து போட்டோவும் எடுத்துக்கொண்டார். விஜயை நேரில் சந்தித்தது முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கும், அவரது குழந்தைக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular Posts