Pages

Monday, August 24, 2009

புதுச்சேரி அரசியலில் நுழைய விருப்பம்: நடிகர் விஜய்



புதுச்சேரி, ஆக. 23: அரசியலில் நுழைய எனக்கு விருப்பம் உண்டு என்று என நடிகர் விஜய் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

மாணவிகளின் கேள்விக்கு விஜய் அளித்த பதில்:

2020-ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூறியுள்ளார். ஏன் 2015-ல் வல்லரசு ஆகக்கூடாது?

விஜய்: இந்தியாவில் படித்து விட்டு இங்கேயே வேலை செய்தால் 2020 என்ன 2010-ல்கூட இந்தியா வல்லரசாக மாறும்.

50-வது படம் எப்படி இருக்கும்?

விஜய்: எனது 50-வது படம் கில்லி, யூத் போன்று இருக்காது. வேட்டைக்காரன் சற்று மாறுபட்ட கதையம்சம் கொண்ட புதுமாதிரியாக இருக்கும். நடனம், இசை, பாடுவது போன்றவை நான் கற்றுக்கொண்டதல்ல. எனக்கு கேள்வி ஞானத்தால் வந்தது.

இந்த மக்கள் இயக்கம் ஆரம்பித்ததற்கு அடிப்படை அரசியலா?

விஜய்: அரசியலில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது நேரம் இல்லை. அதற்கான காலமும் இதுவல்ல. வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன். அரசியல் ஒரு கடல். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.



இந்தியன் மாதிரி வேடங்களில் ஏன் நடிக்கவில்லை?

விஜய்: அது வயதான வேடம். நான் இளைஞன். அதனால் இளைஞர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

என்னை சினிமாவில் நடிக்க வைப்பீர்களா என்று மாணவர் ஒருவர் கேட்டதற்கு, முதலில் படி, உன் தாய், தந்தையர்க்கு மகனாக இரு. பின்னர் பார்க்கலாம். நான் பள்ளியில் படிக்க ஆசையாய் இருக்கிறது என்றால் பள்ளிக்கு செல்ல முடியுமா அதுபோலத்தான். அந்த வயது வரும்போது சென்னைக்கு வா, உன்னை நடிக்க வைக்கிறேன் என்றார்.

இதையடுத்து முதல்வர் வெ.வைத்திலிங்கம் பேசுகையில், விஜய் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியுள்ளார். அவற்றை முறையாகப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

வரவேற்பு: முன்னதாக, புதுச்சேரி வந்த விஜய்க்கு, மாநில எல்லையான கோரிமேட்டில் புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் தலைமை நற்பணி மன்றம் சார்பில் தலைவர் புஸ்ஸி என்.ஆனந்த் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி மாணவ - மாணவிகள் கேட்ட கேள்விகள் - விஜயின் பதில்கள்




புதுச்சேரி மாணவ - மாணவிகள் கேட்ட கேள்விகள்
நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன் என்ற நடிகர் விஜய், அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார், விஜய்.

அப்போது, ரசிகர்களும் மாணவ - மாணவிகளும் கேட்ட கேள்விகளுக்கு, விஜய் பதில் அளித்துப் பேசினார். அதன் சாரம் இதோ...

உங்கள் குழந்தைகள் நடிக்க விருப்பம் தெரிவித்தால் அனுமதி கொடுப்பீர்களா?

"தற்போது அவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பது அவர்களது விருப்பம். அவர்கள் எதை விரும்பினாலும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். புதிய படமான வேட்டைக்காரன் படத்தில் ஒரே ஒரு நிமிட நடன காட்சியில் எனது மகன் ஆடி இருக்கிறான்."

நடிகர் எம்.ஆர். ராதா, சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் மாறுபட்ட வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். உங்களது படத்தில் நீங்கள் ஒரே மாதிரியாக நடித்து வருகிறீர்கள். எப்போது வித்தியாசமாக நடிப்பீர்கள்?

நீங்கள் கூறிய அனைவரும் வயதான கேரக்டரில் தான் மாறுபட்ட வேடத்தில் நடித்து உள்ளனர். நான் தற்போது இளைஞன். கொஞ்ச நாட்கள் ஆகட்டும். அப்புறம் உங்கள் விருப்பப்படி மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன்.

இளைஞர்களை பார்த்து 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று அப்துல் கலாம் கூறி இருக்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் நன்றாக படித்து வெளிநாட்டில் போய் தங்கி விடுகிறார்கள். இந்தியாவில் பெற்ற கல்வியை கொண்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டுக்கு செல்வதை நிறுத்தி விட்டு நம் நாட்டில் வேலை செய்தால் இந்தியா 2015-ல் வல்லரசாக மாறிவிடும்.

உங்களது 50-வது படம் எப்படி இருக்கும்?

'திருப்பாச்சி', 'சிவகாசி', 'கில்லி', 'போக்கிரி' படங்களை விட விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'வேட்டைக்காரன்' படம் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் எனது 50-வது படம் யாரும் எதிர்பாராத வகையில் அமையும்.

நீங்கள் ஆரம்பித்துள்ள மக்கள் இயக்கம், அரசியலுக்கு வர அடிப்படையாக இருக்குமா?

நான் அரசியலுக்கு வர இஷ்டமில்லை என்று கூற மாட்டேன். எனக்கு அரசியலில் உடன்பாடு இருக்கிறது. தற்போது எனக்கு வயது போதாது. இது அதற்கான தருணமும் கிடையாது. அரசியலுக்கு வர நிறைய கற்று கொள்ள வேண்டும். அரசியல் மிகப்பெரிய கடல். அதில் மூழ்கி நீந்தி கடந்து, கரைக்கு வர வேண்டும். அதற்கு நான் என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். எனவே நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன்," என்றார் விஜய்.