Pages

Sunday, October 26, 2014

, நடிகர் விஜய்க்கு சிலை சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நிறுவி இருக்கிறார்கள்.

'கத்தி'
படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கும்
நிலையில், நடிகர்
விஜய்க்கு அவரது ரசிகர்கள்
சிலை ஒன்றை சென்னை -
குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில்
நிறுவி இருக்கிறார்கள்.
தீபாவளி அன்று ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்கத்தில் விஜய் நடிப்பில்
உருவாகி இருக்கும் 'கத்தி' திரைப்படம்
வெளியானது. ரசிகர்கள்
மத்தியில் பெரும்
வரவேற்பை பெற்று முதல் நாளில்
ரூ.23 கோடி வசூல் செய்திருக்கிறது.
இந்த வெற்றியைக்
கொண்டாடும் மகிழ்ச்சியில்,
நடிகர்
விஜய்க்கு சிலை ஒன்றினை நிறுவி இருக்கிற
தமிழ் திரையுலகில் நடிகர்
ஒருவருக்கு தமிழ்நாட்டில்
சிலை திறந்திருப்பது விஜய்க்கு மட்டுமே.
இன்று காலை 11 மணியளவில்
சென்னை - குரோம்பேட்டையில் இந்தச்
சிலை பொதுமக்கள்
பார்வைக்காக திறக்கப்பட்டது.
நடிகர் விஜய் சிலையை உருவாக்க
கிட்டத்தட்ட ரூ.1 லட்சம்
செலவிட்டுள்ளதாக
கூறப்படுகிறது. இதனை ஃபேஸ்புக்கில்
இயங்கி வரும் 'Facebook Vijay Fans Club
- FVFC' என்ற பக்கத்தினர்
நிறுவி இருக்கிறார்கள். இந்தச்
சிலை 'தலைவா' படத்தில் வரும் விஜய்
கெட்டப்
போன்று வடிவமைக்கப்பட்டு இருப்பத.



Friday, October 24, 2014

கத்தியை பாராட்டும் செலிபிரட்டிகள்






நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கத்திக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தனுஷ் கத்தியை பாராட்டி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது கத்தி படத்தை மேலும் சில சினிமா பிரபலங்கள் எப்படி பாராட்டியுள்ளனர் என்பதை பார்ப்போம்.

தயாநிதி அழகிரி: 'கத்தி' திரைப்படம் ஒரு மாஸ் எண்டர்டெயிட்மெண்ட் கதை. கண்டிப்பாக விஜய்யை தவிர வேறு யாராலும் இவ்வளவு அற்புதமான நடிப்பை கொடுத்திருக்க முடியாது.

சிபிராஜ்: சமூக கருத்துக்களுடன் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் வெளிவந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த குறையை கத்தி தீர்த்துவிட்டது. 

சாந்தனு பாக்யராஜ்: ஒரு நல்ல சமுக கருத்தை ஒரு மாஸ் நடிகர் கூறினால்தான் அந்த கருத்து அனைவரிடமும் சென்றடையும். அந்த வகையில் கத்தி அனைவரின் இதயங்களையும் தொட்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. விஜய்யின் சூப்பர் நடிப்பு அபாராம்.

தனஞ்செயன்: அருமையான திரைக்கதை, அற்புதமான விஜய்யின் இரட்டை வேடம், ஒரு நல்ல கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட், அனைவரையும் கவரும் வசனங்கள் என அனைத்திலும் பெர்பக்ட் உள்ள திரைப்படம் கத்தி. முருகதாஸ் மற்றும் விஜய்க்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரேயா ரெட்டி: கத்தி படத்தில் விஜய் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நான் மிகவும் விரும்பி ரசித்த திரைப்படங்களில் ஒன்று

ராதிகா சரத்குமார்: ஸ்ட்ராங்கான மெசேஜ் உடன் வெளிவந்துள்ள மாஸ் திரைப்படம். முருகதாஸ், விஜய்க்கு வாழ்த்துக்கள். ஐ லவ் கத்தி.

விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் பலி!

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டத்தின் போது  திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டின் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர்  பலியானார்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்,   வடக்கஞ்சேரியில் உள்ள  ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின்   கட் அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்துள்ளார்.

அவரின் பெயர்   உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர்.  விஜய்  ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர்.