Friday, May 25, 2012

Vijay at Urumi Premiere Show!

Saturday, May 5, 2012

Nanban Nooravathu Naal Special

விஜயைப் பற்றி ரசிகர்கள் அவதூறாக பேசக்கூடாது-அஜித்

நடிகர் அஜித் நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு:-
எனது 20 வருட சினிமா வாழ்க்கையில் நிறைய நல்ல படங்களில் நடித்துள்ளேன். மோசமான படங்களிலும் நடித்துள்ளேன். நல்ல முடிவுகள் எடுத்தது உண்டு. மோசமான முடிவுகளையும் எடுத்தேன். அற்புதமான மனிதர்களையும் சந்தித்து இருக்கிறேன். இதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இவை என்னை செதுக்கி உள்ளது.
கடந்த கால நிகழ்வுகள் பற்றி எந்த வருத்தமும் கிடையாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். எனக்கு பெரிய லட்சியங்கள் கிடையாது. வாழ்க்கை என்பது பெரிய பரிசு.
ஆக்கப்பூர்வமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் இல்லை. நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் உள்ளது என்பதை நான் நம்புகிறேன்.
எனவே நமக்கு கிடைப்பது கிடைக்கும். ஏன் கவலைப்பட வேண்டும். படத்தின் வெற்றிக்கான பார்முலா தெரிந்தால் எல்லோருமே 100 சதவீத ஹிட் கொடுக்க முடியும். ஒரு படம் ஜெயிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது. அது கூட்டு முயற்சி. படங்களை தேர்வு செய்ய இயக்குனர், தயாரிப்பாளர்களுடனான புரிதல் முக்கியம். கதையும் முக்கியமானது. படத்தை முடிவு செய்த பின் எதிலும் நான் தலையிடமாட்டேன். நான் உணர்வு பூர்வமாக பேசுகிறேன். நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று கிடையாது. அரசியல் ரீதியாக இது சரி இல்லாமல் இருக்கலாம். அது என் குற்றம் இல்லை.
அஜித்துக்கும் எனக்கும் தொழில் முறை போட்டிதான் உள்ளது என்றும், சினிமாவுக்கு வெளியே நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும் விஜய் சொல்லி இருப்பது உண்மைதான்.
விஜய் மனைவி சங்கீதாவும் என் மனைவி ஷாலினியும் நட்புடன் பழகுகிறார்கள். இருவர் குழந்தைகளும் ஒன்றாக இருக்கின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ரசிகர்கள் ஒருத்தரை ஒருத்தர் பற்றி தவறாக கருத்துக்கள் வெளியிடுவது மனதை புண்படுத்துகிறது. சாதாரண மனிதன் இதை பார்க்கும்போது முகம் சுளிக்கிறான். எனவே இவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மனைவி ஷாலினி எல்லா விஷயங்களிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். சினிமா சம்பந்தமாக நான் எடுக்கும் முடிவுகளில் தலையிடுவது இல்லை. நான் நன்றாக சமைப்பேன். எனது அம்மா சிறு வயதில் இருந்தே சமையல் கற்று கொடுத்து உள்ளார்.
இவ்வாறு அஜீத் கூறினார்.

துப்பாக்கி விஜய் = பாதி எம்.ஜி.ஆர் + மீதி ரஜினி

தீபாவளிக்கு வெடிக்க இருக்கிறது இளைய தளபதியின் துப்பாக்கி. 

* ‘துப்பாக்கி’ படத்தை முதலில் தயாரிக்க இருந்த நிறுவனம் ஜெமினிதானாம். 
ஆனால், கலைப்புலி தாணு,விஜயின் தந்தை எஸ்.ஏ.சி.யிடம் ‘சக்கரக்கட்டி’, 
‘கந்தசாமி’... 
என்று தாம் தயாரித்த படங்களால் அதிகமான நஷ்டம். விஜய் கால்ஷீட் கிடைத்தால் 
மீண்டு வந்துவிடுவேன் என்று கேட்டுக் கொண்டதால் படம் கைமாறி உள்ளதாம். 
தவிர, கைமாற்றிவிட்டதற்காக 
எஸ்.ஏ.சி.க்கு லாபம் தானாம்!

* இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சம்பளமாக, தயாரிப்பாளர் தாணு பத்து விரலைக்
காட்ட, இயக்குனர் தரப்பு இரண்டு விரலைக் கூடுதலாகக் காட்ட ஊடலில் 
ஊசலாட்டம் 
நடந்திருக்கிறது. பிறகு இருவரின் கையையும் இணைத்து பன்னிரண்டுக்கு ஓகே 
சொல்ல வைத்தது இளைய தளபதி தரப்புதானாம்.  


* ‘கஜினி’யில் முதலில் நடிக்க இருந்தது இளையதளபதி. மொட்டை போட மறுத்ததால் 
சூர்யாவுக்குப் போனது வாய்ப்பு. ஆனால், துப்பாக்கியில் விஜய், ஹேர் ஸ்டைலை

மாற்றி மாற்றி நடிக்க சம்மதித்துள்ளார்.

* தென் தமிழகத்தின் அருவி சம்பந்தப்பட்ட ஓர் ஊரில் ஃப்ளாஷ்பேக் கதையும் 
மும்பையில் முழுகதையும் முடிகிறதாம். ‘பாட்ஷா’ பட ஸ்டைலில் ஃப்ளாஷ்பேக் 
விறுவிறு 
சுறுசுறுன்னு இருக்குமாம்.

* ‘நண்பன்’ படத்தின் மூலம் விஜயின் பிரிக்க முடியாத நண்பனாகிவிட்ட 
சத்யனுக்கு, துப்பாக்கியில் நல்ல வாய்ப்பாம். துப்பாக்கிக்குத் தோட்டா 
எவ்வளவு முக்கியமோ அவ்வளவு 
முக்கியமாம் சத்யனின் காமெடி. கதையோடு இணைந்த காமெடியாம்.

* அசின்தான் ஏ.ஆர்.முருகதாஸின் ஹீரோயின் சாஸாம். ஆனால், விஜதான் மஹதிரா 
புகழ் காஜல்அகர்வாலை டிக் செய்தாராம். தெலுங்கில் படம் மாட்லாடும் போது 
காஜல் இருந்தால் 
படத்துக்கு ரீச் கிடைக்கும் என்பது இளைய தளபதியின் கணிப்பு.
 
 
* ‘துப்பாக்கி’, தீபாவளிக்கு வெளியாகும் போது களத்தில் இருப்பது சூர்யாவின்
‘மாற்றான்’. ‘ஏழாம் அறிவு’ ‘வேலாயுதம்’ போட்டியில் வேலாயுதம் கொஞ்சம் 
முந்தியதால் 
இப்போதைய போட்டியைக் கண்டுகொள்ள வேண்டாம் என்பது எஸ்.ஏ.சி. அட்வைஸாம்.

* மும்பை தொடங்கி சென்னை, ஹாங்காங், தென் மாவட்டம், பாண்டிச்சேரி என பல 
இடங்களிலும் ஷூட்டிங் நடக்க உள்ளது. பாடல் காட்சிக்காக விஜய்யும் காஜலும் 
பிரேசில் 
செல்ல இருக்கிறார்கள். அங்கு இரண்டு பாடல்கள் படமாக்கப்பட உள்ளன. ஹாரிஸ் 
இசையில் விஜய் ஒரு பாடலைப் பாடியுள்ளார். ‘பேசினா துப்பாக்கி, வெடிச்சா 
பீரங்கி’ என்ற 
ஓப்பனிங் சாங்கில் ஒரு பீரங்கி வெடிக்கும் வேகமும் சக்தியும் இருக்குமாம்.

* ‘போக்கிரி’ அசின் போல், ‘வேலாயுதம்’ ஹன்சிகா போல், ‘துப்பாக்கி’யில் 
காஜல் மாடலிங் மற்றும் கல்லூரிப் பெண்ணாக வருகிறார். காஜல் அகர்வால் 
காமெடியிலும் கூட்டுக் 
குடும்பத்திலும் பிறந்த பெண்ணாகவும் மிரள வைக்கப் போகிறார்.

* கலைப்புலி தாணு தான், ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டியவர். 
அதுபோல துப்பாக்கி விளம்பரம் மூலம் விஜய்க்கு புதிய பட்டம் தர யோசித்து 
வருகிறாராம்.  


* இதுவரை 90 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்துள்ளது. இரண்டு ஷெட்யூல் 
முடிந்ததை விஜய்க்கு, இயக்குனர் ஏ.ஆர். போட்டுக் காண்பிக்க, படம் 
எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக 
வந்துள்ளதால் விஜய் ஏ.ஆர்.முருகதாஸைக் கட்டிப் பிடித்துக் கொண்டாராம். 

* என்ன நாடு; ஏன் இப்படி எல்லாம் என்று மனம் வெதும்பிப் போகும் இளைஞர்கள் 
இருப்பார்கள். என்ன நடந்தால் நமக்கென்ன என பலரும் பேசாமல் போய் 
விடுவார்கள். ஆனால், 
நமது நாட்டில் தப்பு நடந்தால் நாம்தான் தட்டிக்கேட்க வேண்டும் என அநியாயம் 
பண்ணுகிறவனை துவம்சம் பண்ணுகிற ராணுவத் தளபதி வேடத்தில் இளையதளபதி 
வருகிறாராம்.

* ‘நண்பன்’ படத்தை 10 கோடி கொடுத்து வாங்கிய விஜய் டி.வி. இப்படத்தையும் 
வாங்க போட்டி போட, சன் டி.வி.யும் களத்தில் குதிக்க, வேந்தரும் களத்திலும் 
குதிக்க, 
ஜி. தமிழும் 10 கோடிவரை கொடுக்கத் தயாராக உள்ளனர்.  


* பாதி எம்.ஜி.ஆர்; பாதி ரஜினி... என இப்போதே விஜயே வெட்கப்படும் 
அளவுக்குப் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறார் கலைப்புலி தாணு.

VIJAY Na @ Rowdy Rathore Song Shooting


Popular Posts